என்ன பிழை செய்தோம்...... ? ? ?
பணம் என்ற காகிதத்தால் தினம்
மனம் நொந்து வாழ்கிறோம் !
கடன் இன்னும் இருப்பதால் ஏனோ
மீண்டும் பணம் தேட நினைக்கிறோம்
நம்மை அறியாமல் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகளை
துடைத்துக் கொள்கிறோம் - ஆனால்
அறிந்தே உருவாகும் ஆசைகளை மட்டும்
ஏனோ துடைக்க மறுக்கிறோம்.....
வாழ்வதாய் எண்ணி .....
வாழ்க்கையின் முகவரியை
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்
பணத்தின் முகவரி கிடைத்துவிட்டதாக எண்ணி
நாம் இழந்த வசந்தம் தான் கிடைத்திடுமோ.......
பணத்தால் அடைந்த காயம் தான் ஆறிடுமோ....... ? ? ?

No comments :
Post a Comment