Friday, May 30, 2014



பிஞ்சுக் குழந்தைகளின் பஞ்சுக் கால்கள்,..........
முகத்தைத் தீண்டுவது போல,..........
மனதுக்குப் பிடித்தவர்கள் எல்லாம்,..........
நெஞ்சுக்குள் நினைவை மீட்டுகிறார்கள்..........

உன்னோடு நான் கொண்ட காதல்.........
எதற்காக எனத் தெரியவில்லை.........?
"எனை ஈர்த்தது"..........
உன்னிடத்தில் எதுவென்றும் புரியவில்லை..........
கண்டதும் காதல் வரக் காரனமும் தெரியவில்லை.........


உனக்காக எல்லாரையும் இழந்தேன்.........
நீ என்னை இழப்பாய் என்று தெரியாமல்........!!!


தினமும் என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்
நலம் விசாரித்து சிதறிச்செல்லும்
புன்னகையின் மிச்சங்களில்தான் இன்னும்
சிரித்துக்கொண்டு இருக்கின்றன
சாலையோரப் பூக்கள்........


உனக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்
நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும்
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள்……


"தா" என்று கேட்காமல் கொடுத்தலில் தொடங்கி,
"வலி" என்று சொல்லுமுன் விழிகள் அழுது
உனக்காக நானும், எனக்காக நீயுமாய்
உறவாடிய நட்பின் இனிய கணங்களில்
மகிழ்ச்சியாய் கடந்துபோனது - காயப்படாமல்
நமது உறவின் முதல் வருடமும்


பாதி ஓவியம் தீட்டி
களைத்துப் போன
தூரிகையின் பெரு மூச்சாய்
எப்பொழுதும் நமது மறு
சந்திப்பை பற்றிய உடன்படிக்கைகள்……


உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து.......
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…....


நூறுமுறை பிறந்தாலும் 
நூறுமுறை இறந்தாலும் 
உனைப் பிரிந்து வெகுதூரம் - நான் 
ஒருநாளும் போவதில்லை 
உலகத்தின் கண்களிலே 
உருவங்கள் மறைந்தாலும் 
ஒன்றான உள்ளங்கள் 
ஒருநாளும் மறைவதில்லை! 

ஓராயிரம் பார்வையிலே 
உன் பார்வையை நான் அறிவேன் 
உன் காலடி ஓசையிலே 
உன் காதலை நான் அறிவேன் 

இந்த மானிடக் காதலெல்லாம் 
ஒரு மரணத்தில் மாறி விடும் 
அந்த மலர்களின் வாசமெல்லாம் 
ஒரு மாலைக்குள் வாடி விடும் 
நம் காதலின் தீபம் மட்டும் 
எந்த நாளிலும் கூட வரும் 

இந்த காற்றினில் நான் கலந்தேன் 
உன் கண்களை தழுவுகின்றேன் 
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் 
உன் ஆடையில் ஆடுகின்றேன் 
நான் போகின்ற பாதையெல்லாம் 
உன் பூமுகம் காணுகின்றேன்


அவளுடைய 
இதழ்களும் குறள்தானோ? 
இரண்டே வரியில் 
எத்தனை பாடங்கள்…?


உயிரே..... 

நீ சொல்ல வந்த காதலை 
உன் கண்களால் எனக்கு சொன்னாய்... 

காதல் என்னும் காவியத்தை 
உதடுகளால் உச்சரித்தேன் நான்... 

கண்களாய் பேசி காதல் 
நோயினை தந்தவளே... 

உன் கண்களை கண்டு 
காதலை உணர்ந்தேன்... 

உனக்குள் இருக்கும் இன்னொரு 
பெண்மையும் உணர்ந்தேன் நான்... 

காதல் தந்தவளே 
கை பிடிப்பேன் நாளை... 

நான் உன்னை.....


மறக்க முடியாத 
உன் முகம்... 
இன்றும் இனிக்கும் 
உன் குரல்... 
என்றும் நிறைவாய் 
உன் நினைவு... 
தொடரரும் நிழலாய் 
உன் காதல்... 
என்னுள் உயிராய் 
நீ!!!...



ஒரு பூகம்பம் வந்து சென்ற தடமும்.........
உன் சிறு புண்னகை தந்து சென்ற உணர்வும்..........
ஒன்றாய் என் உள்ளத்தில்.........



நான் உன்னை விட்டு பிரிந்து போனாலும்........
என் கண்ணீர் தடயங்கள் காட்டிக்கொடுக்கும்.........
நான் சென்ற இடத்தை......... ! ! !
உனக்குள்ளும் காதல் வந்தால்..........
அதை பின்தொடர்ந்து வா.........
காத்திருப்பேன் உனக்காக......... 



இமைகள் அசையாமல் இசைக்கும் இந்தப் பார்வை........
என்றும் காதலின் சங்கீதம்..........



என் இதய நதியின் ஓடமாய் உன் நினைவுகள்........
என்றும் ஓடிக்கொண்டே இருக்கும்.......


முகம் தெரியாத - அந்த 
முழு நிலவுக்காக 
காத்துகிடக்கின்றேன் ......
சந்திரகிரகனமாக நான்......


நான் எழுதி அனுப்பிய காதல் கடிதங்களில்.......
அவள் கப்பல் விட்டு விளையாடிக்கொண்டு இருந்தாள்.......
தண்ணீரில் அல்ல......
என் கண்ணீரில்......

Thursday, May 29, 2014




பூக்காத பூக்களுக்காக
மன்னிப்பு கேட்பதில்லை மரங்கள்..........


சிறகு சிலுப்பி
பசப்பிக் கொள்கிறது
சிறுகுருவி....... !
புதுக்கூடு கட்டச்சொல்லி
காதலினிடம்........ !


உரசிவிட்டுப் போன தென்றல்.......
விட்டு விட்டு போனது மழையை.......


விழுந்தது நீதானே.......
என் விழிகளில்....... ! ! !
எதற்காய் அழுகின்றது பேனா.......
கவிதைகளாய்........


வாசலில் ஜோடியாய்.......
மடிந்தது வாழை மரம்........ 
விடிந்தால் கல்யாணம்........


இரவு முழுவதும் நனையத் துடித்தும்........
சில வினாடிகளில் கனவாகிப் போனது........
அந்த அழகிய நிஜம்.......

சில வினாடிகளே வந்து சிந்திச் சென்றாலும்........
இன்னும் தூறிக்கொண்டே இருக்கிறது........
அந்த அழகிய நிமிடங்கள்........
நிற்காத அடைமழையென என் உள்ளமெங்கும்........ !

இரவுகள் விடிந்து போகலாம்........
நிமிடங்கள் கடந்து போகலாம்........
இருப்பிடம் மாறிப்போகலாம்........

ஆனால் நான்மட்டும் மீண்டும்........
ஒரு மழைக்காக காத்திருக்கின்றேன்........
அதே ஏக்கங்களுடன் வானம் பார்த்த பூமியாய்........ ! ! !


மாலை நேரம்....... !
மணி ஐந்து....... !

கடல் மீது கொண்ட காதலால்
கடற்கரையை கட்டியணைத்துக் கொண்டிருந்தது....... !
கடல் அலை.......

அந்த கடற்கரையோரம்
அவளுக்காய் காத்திருந்தேன்....... !
நான்......

எப்போதும் எனக்கு முன்னே வந்து
எனக்காக காத்திருப்பவளை
இன்று ஏனோ - நான் வந்து
20 நிமிடமாகியும் காணவில்லை....... !

யோசித்துக்கொண்டிருந்த
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
அவள் வந்தாள்....... !

முழு நிலவாய் மின்னும் - அவள்
முகத்தில் இன்று
பிறை நிலவாய் ஏதோ.......
குறை தெரிந்தது....... !

என் பக்கத்தில் அமர்ந்து
பல கதைகள் சொல்பவள்......
இன்று ஏனோ
இடைவெளி விட்டு நின்றாள்....... !

எல்லாமே
எனக்கு புதிதாயிருந்தது........ !

அவள் முகத்தையே
பார்த்து நின்றேன்........ !

அவள் கண்களுக்குள்
கண்ணீர்த்துளி....... !
என் இதயம் இப்போது
மௌனமாய் அழுதது....... !

கண்ணீர்த் துளிகளுக்கு
காரணம் கேட்டேன்........ !
மௌனமே பதிலாய் கிடைத்தது........ ! !

இன்னொருமுறை கேட்டேன்.......!
இப்போதும் மௌனமே பதிலானது........ ! !

அரைமணி நேரம்
அதே மௌனம்....... !
அதற்குள் ஆயிரம் முறை செத்துப்பிழைத்தது........ ! !
என் இதயம்........

அரைமணி நேரம் கழித்து
அவள் வாய் திறந்தாள்........ !

என்னை நீ
மறந்துவிடு என்றாள்....... !
மறுத்தேன் நான்....... !

நீ தான் என் உயிர் என்றவள் - இப்போது
நீங்கிப்போகச் சொல்கிறாள்....... !
மரணம் உன் மடியில் என்றவள் - இப்போது
மறந்து போகச் சொல்கிறாள்....... ! !

இதயத்திற்குள்
இடிதாக்கியது போல்
இப்போது எனக்கு உணர்வு....... !

என் உதடுகளோ பேசத்தெரியாமல்
ஊமையாகி நின்றது....... !
கண்கள்
கண்ணீர்த் துளிகளாய் பேசியது....... !

விளக்கம் சொல்ல
விரும்பவில்லை அவள்......... !
விலகி நடக்க தொடங்கினாள்....... ! !

தூரத்தில் அவள்
புள்ளியாய் மறையும் வரை
அவளை பார்த்து நின்றேன் நான்........ !

என் கால்களோ
எனக்கே தெரியாமல்
ஆழ்கடலை நோக்கி
பயணமானது........ ! !

அன்றிலிருந்து இரண்டாவது நாள்........

அவள் வீடு........

அன்றைய நாளிதளை
அவள் புரட்டிக்கொண்டிருந்தாள்........ !

அதன் ஆறாவது பக்கம்........
கடற்கரையோரம்
அடையாளம் தெரியாத
ஆண் பிணம்....... !
அருகில் என் புகைப்படம்....... ! !
அலறினாள் அவள்........ ! !

பார்த்தவள்
பதறியடித்துக்கொண்டு ஓடினாள்....... !

ஊரே கூடியிருக்க
உயிரில்லாமல் கிடந்தேன் நான்........ !
மூச்சு நின்று
மூன்று நாட்களாயிருந்தது......... !

அரை மணி நேரத்தில்
அங்கு வந்தாள் அவள்........ !

உயிரில்லாத என்னைக்கண்டு - அவள்
உடலே நடுங்கியது........ !
கட்டிப்பிடித்து
கதறினாள் அவள்....... !

ஆசையிருந்தும்
ஆறுதல் சொல்ல முடியாமல் நான்........ !

மரித்துக்கிடந்த என்னிடம்
மறந்துவிட சொன்னதற்காய்
மன்னிப்புக்கேட்டாள்....... !

என்னை கட்டி அணைத்தபடி
விட்டுப்போகாதே என அழுதாள்......... !

எனக்கே தெரியாத
ஏதோ ஓரிடத்திலிருந்து
நடப்பதையெல்லாம்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான்
எனக்குள் நினைத்துக்கொண்டேன்........ !
ஓ...... கடவுளே....... !
இந்த ஜென்மம் முழுவதும்
இவளோடு வாழ
நான் உயிரோடிருந்திருக்க கூடாதா...... ! ! !



என் நினைவுகள் எங்கெங்கோ சென்றாலும்........
இறுதியில் நீ எங்கே என்று தான் தேடுகிறது........



நட்பும்,காதலும் 
ஒரே புள்ளியில் தான் இருக்கிறது.........
அதில் அன்பும்,நம்பிக்கையும் மிகுமிடத்தில் 
மெய் காதல் பிறக்கிறது........


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! 

வசதியாகத்தான் இருக்கிறது மகனே… 
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம். 

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதற கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!



நான் புரிந்து கொள்ளவில்லை என நீயும் !! 
நீ புரிந்து கொள்ளவில்லை என நானும் !! 
நாம் புரிந்து கொண்டது இதுதானா !


விடிவதற்குள் விழுந்துவிடுவோம் எனத்தெரிந்தும்........
எரியும் விளக்கோடு விளையாடும் ஏகாந்தப் பிறவிகள்.........

....... ஈசல்கள் ........


காற்றே என்னைக் கொஞ்சம் தீண்டிவிட்டுப் போ...... !
என்னைத் தான் அவள் நேசிக்கவில்லை.......
என்னைத் தொட்ட உன்னையாவது அவள் சுவாசிக்கட்டும்.......



ஒற்றைக் குடை....... !
இந்த ஒற்றைக் குடைக்குள் உன் நினைவுகளைச் சுமந்து

 துள்ளித் தெறிக்கும் மழையை ரசிப்பதில் தான் எத்தனை சந்தோசம்.......


ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும்......
ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள்......
எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய்
தலைவரை கம்பளியை இழுத்து மூடி 
தூக்கத்தை அழைக்கின்றேன் என்னை
அணைத்துக்கொள்ளுமாறு...... ஆனால்
தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்.......


உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்



உன் நினைவுகள் என்னில் நிலைத்திருக்க
என் நினைவுகள் எல்லாம் மறந்திருக்க
உன்னோடு நான் வாழ்ந்திருக்க
காலம் முழுவதும் காத்தருப்பேன்



பழஞ்சோறு கூட பகல் கனவாகி போகிறது
வயிற்றிலே சில சுருக்கம் 
நெஞ்சிலே பெரும் ஏக்கம் 
உயிர் வாழ்வதே ஒரு போராட்டம் 
பசியை மறக்க தினம்தோறும் சில தூக்கம்.....
அடுப்படியில் பூனை தூங்குகிறது 
இடுப்படியில் பிள்ளை தூங்குகிறது 
பக்கத்துக்கு வீட்டுக்கு கடன் வாங்க சென்ற 
கணவனை நினைத்து கண்கள் ஏங்குகிறது 
கணவன் கை விரித்து வரும் நிலை பார்த்து 
அடக்கி வைத்த கண்ணீர் துளிகள் 
கண் இமைகளை விட்டு தாண்டுகிறது.....
குறையாத ஏக்கங்களோடு 
குடிசையில் வாழும் ஏழைகளுக்கு 
மெழுகு வர்த்தியின் தரிசனம் 
பசி என்ற இரண்டு எழுத்து 
ஏழைகளின் தேசிய கீதமாக ஏத்தப்டுகிறது 
ஏழையாக பிறந்துவிட்டோம் வையகத்தில் 
வாழ வழி தெரியவில்லை எம்மிடத்தில் 
கடவுளின் தரிசனம் கிடைத்திடுமோ இவ்விடத்தில்.....

பணம் படைத்த சமுதாயமே!
மிஞ்சிய சோற்றை நாய்க்கு போடும் உங்கள் உள்ளம் 
ஏன் எஞ்சிய பணத்தை ஏழைகளுக்கு கொடுக்க மறுக்கிறது 
பணம் இல்லாததால் அவர்கள் இப்போது ஏழைகள் 
மனம் இல்லாததால் நீங்கள் எப்போதும் ஏழைகள்.....
கால் செருப்பு இன்றி வீதியில் பிச்சை எடுக்கும் 
மனிதனை பார்த்துகொண்டு 
உனக்கு காரில் ஒரு பயணம் தேவையா ?
அவனுக்கு காத்திருப்பது ஆறடி 
உனக்கு காத்திருப்பதும் ஆறடி 
இதற்கு இடையிலே ஏன் அந்தஸ்து என்றதொரு பேரிடி 
மண்ணில் பிறப்பது வாழ்ந்துவிட்டு இறப்பதக்குதான் 
ஆனால் ஏனோ ஏழைகளை வாழ முன்பே இறக்கவைகிரீர்கள் .....
உங்களுக்கு பலத்த உணவு வயிறு நிறைய முட்டுகிறது 
அவர்களுக்கு பழைய கஞ்சி வயிற்று அடியில் தட்டுகிறது 
பணம் படைத்த மனித இனமே!
கையில் எஞ்சி உள்ள பணத்தை கள்ளவழியில் போக்காமல் 
ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் நல்ல வழியில் போக்குங்கள் 
உங்களிடம் உள்ள செல்வதை ஏழைகளுக்கு அள்ளி கொடுக்க வேண்டாம் 
கிள்ளியாச்சும் குடுங்கள் பாவம் ஏழைகளும் உயிர் வாழட்டும்.....